ஊரு சனம் – மெல்ல திறந்தது கதவு

OORU SANAM - MELLA THIRANTHADHU KADHAVU


ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
… ♪… … ♪… … ♪…
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
… ♪… … ♪… … ♪…
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே

… ♪… … ♪… … ♪… … ♪… … ♪…

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே
ஏம் மாமனேஏம் மாமனே

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே

… ♪… … ♪… … ♪… … ♪… … ♪…

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா ஆ
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா ஆ
மாமன் காதில் கேளாதா
நெலா காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும்
இந்த நேரந்தான்இந்த நேரந்தான்

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...