MANNA THOTTU KUMBITTUTU - SAAMUNDI
மண்ண தொட்டு கும்புட்டுட்டு
பொட்டொன்னு வச்சிக்கம்மா
வெள்ளக்கல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
மண்ண தொட்டு கும்புட்டுட்டு
பொட்டொன்னு வச்சிக்கம்மா
வெள்ளக்கல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
தெக்கால ஓடுர காவிரி ஆறும்
சந்தங்கள் பாடட்டுமே
வடக்கால ஓடுர வைகையும் வந்து
வாழ்த்துக்கள் கூறட்டுமே
ஏன் ராசாத்தி…………
நல்ல நேரம் வந்தது, யோகம் வந்தது
மாலையும் சூடிக்கம்மா
மண்ண தொட்டு கும்புட்டுட்டு
பொட்டொன்னு வச்சிக்கம்மா
வெள்ளக்கல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
கண்ணாடி வளையலும் கல்லு வச்ச ஜிமிக்கியும்
கண்ணான தங்கச்சிக்கு நான் மாட்டுவேன்
அன்பில் நீராட்டுவேன்
அம்மா நீ குமரியா யாராலும் குழந்தையா
என்னாளும் நானெடுத்து சீராட்டுவேன்
நெஞ்சில் தாலாட்டுவேன்
முத்தான புல்லாக்கு மூக்கோடு தானாட
பொன்னான லோலாக்கு காதோடு கூத்தாட
நெத்திப் பொட்டுப் பூவோடு நீ வாழணும்
நித்தம் நித்தம் நல்வாழ்த்து நான் பாடணும்
மண்ண தொட்டு கும்புட்டுட்டு
பொட்டொன்னு வச்சிக்கம்மா
வெள்ளக்கல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
செவ்வாழ குலுங்கிட சீரெல்லாம் விளங்கிட
சிங்காரப் பந்தலிலே கல்யாணமாம்
தங்க கல்யாணமாம்
தஞ்சாவூர் கரகமும் பொய்க்காலு குதிரையும்
முன்னாடி ஆடிவர ஊர்கோலமாம்
காரில் ஊர்கோலமாம்
மத்தாப்பு பூவானம் பட்டாசு வேட்டோடு
மாப்பிள்ள பொண்ணுந்தான் வந்தாச்சு ரோட்டோடு
வாழ்த்து தான் கூறாதோ பூங்காத்துதான்
கண்ணுப் படும் ஆத்தாடி ஊர்ப் பார்த்துதான்
மண்ண தொட்டு கும்புட்டுட்டு
பொட்டொன்னு வச்சிக்கம்மா
வெள்ளக்கல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
தெக்கால ஓடுர காவிரி ஆறும்
சந்தங்கள் பாடட்டுமே
வடக்கால ஓடுர வைகையும் வந்து
வாழ்த்துக்கள் கூறட்டுமே
ஏன் ராசாத்தி…………
நல்ல நேரம் வந்தது, யோகம் வந்தது
மாலையும் சூடிக்கம்மா
மண்ண தொட்டு கும்புட்டுட்டு
பொட்டொன்னு வச்சிக்கம்மா
வெள்ளக்கல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
Very useful & detailed information on Traditional Paathi Vilakku. You can buy more Authentic and Handmade Paathi Vilakku Lamps from our artisans Online in Kerala @ Kerala Paathi Vilakku.
ReplyDelete