அம்மன் கோயில் கும்பம் – அரண்மனைக் கிளி


AMMAN KOVIL KUMBAM - ARANMANAI KILI


இரு:   அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
கும்பங்கள ஏத்தி வைச்சு………
கொலவையிட்டு பாடுங்கடியே………..

அம்மன் கோயில் வாசலிலே
ஏ பொங்கணும் பொங்கணும் பொங்கச்சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு

பெ.கு:அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
                                           
♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

மி:       பத்தினியே காளியம்மா
பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
உந்தன் குங்குமத்த சூடி வந்த
மங்களங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே

சு:        ஊருக்குள்ள எங்களுக்கு உன்ன விட்டா ஆளேது
நாங்க உன்ன கும்பிடாத நாளேது
பூமிக்குள்ள ஊத்து போல பொங்கி நிக்கும் தாயம்மா
சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா

.கு:  சிங்கம் உந்தன் வாகனந்தான் எங்கள் தாய்
அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே

பெ.குஅடி பட்டி தொட்டி ஏழைகள ரட்சிப்பாயே……..
அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..

இரு:    அம்மன் கோயில் வாசலிலே
ஏ பொங்கணும் பொங்கணும் பொங்கச்சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு

பெ.கு: அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..

கு:        …..…..…..…..ஆஆஆஆஆஆஆஆ

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

சு:        எங்கள் நெஞ்சங்கள வானத்திலே
றெக்க கட்டி ஆடுகிற நாளு இது
இங்கு வஞ்சங்களே ஏதுமில்லே
நல்லவங்க வாழுகிற ஊரு இது

மி:       மாதமிங்கு மூனு மழ பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சமின்றி வாழ வேணும் உன்னாலே
தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேர
நல்ல வழி காட்டி விடு முன்னேர

கு:        மண்ணுலகம் சுத்தி வரும் தன்னத்தானே
நெஞ்சமனம் சுத்தி வரும் உன்னத்தானே

பெ.கு: அடி புத்தி தரும் சித்தி தரும் கொம்பு தேனே

கு:        அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..

அம்மன் கோயில் வாசலிலே
ஏ பொங்கணும் பொங்கணும் பொங்கச்சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு

அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
கும்பங்கள ஏத்தி வைச்சு………
கொலவையிட்டு பாடுங்கடியே………..
 

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...