மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN

ஆ:    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
காவல் ஏது, கட்டுக்கள் ஏது, காட்டாறு பாயும் போது

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி

( … … )( … … )( … … )( … … )( … … )

பெ:   நீயில்லாது நித்திரை ஏது, பாயில் வாடும் பைங்கிளி
நீ இருந்தால் சித்திரைக் கூட வாடை வீசும் மார்கழி

ஆ:    நீயில்லாது நித்திரை ஏது, பாயில் வாடும் பைங்கிளி
நீ இருந்தால் சித்திரைக் கூட வாடை வீசும் மார்கழி

பெ:   மாதம் தேதி பார்த்து காதல் பூக்காது
நீரை மீனும் சேர ஊரைக் கேட்காது

ஆ:    பருவ ராகம் பாட புதிய கோலம் போட
ஆதி அந்தம் அனைத்தும் சொந்தம் நீங்காது கூடும் போது

பெ:   மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
காவல் ஏது, கட்டுக்கள் ஏது, காட்டாறு பாயும் போது

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி

( … … )( … … )( … … )( … … )( … … )

ஆ:    நாலு பேர்கள் கண் பட கூடும் நீயும் நானும் கூடினால்
ராஜ யோகம் கைவரும் இன்று தோளில் தோகை ஆடினால்

பெ:   நாலு பேர்கள் கண் பட கூடும் நீயும் நானும் கூடினால்
ராஜ யோகம் கைவரும் இன்று தோளில் தோகை ஆடினால்

ஆ:    தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு
மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு

பெ:   வாழும் நாட்கள் யாவும் உன்னுடன் வாழ வேண்டும்
சொந்தம் என்று பந்தங்கள் என்று நீ இன்றி யாரும் இல்லை

ஆ:    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி

பெ:   கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி

ஆ:    வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே

பெ:   காவல் ஏது, கட்டுக்கள் ஏது, காட்டாறு பாயும் போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி

ஆ:    கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி

கொட்டுக்களி கொட்டு நாயனம் – சின்னவர்

KOTTUKALI KOTTU - CHINNAVAR

ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

பெ:      வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே

பெ:      தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

() … … () … … () … … ()

பெ:      சின்னவரு பார்க்கும்போது தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது மயக்கமாகுது....

ஆ:       கண்ணிரண்டும் ஜாலம் பேசிக் காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில் என்னைப் போட்டு இழுக்குது

பெ:      கோடி ஆசை கூடிக் கூடிக் கோலம் போடுது

ஆ:       கோலம் போட்டுப் பாடிப் பாடித் தாளம் போடுது

பெ:      ராஜராஜனும் கைக்கோர்த்த ராணியாகணும்

ஆ:       காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்

பெ:      ஏழு லோகம் மாலைப் போட வாழ்ந்து பார்க்கணும்

ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

பெ:      வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே

பெ:      தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

() … … () … … () … … ()

ஆ:       முத்துமணி மாலைப் போல மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரந்தான்

பெ:      பொட்டு வைத்து பூவைச் சூடிப் பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்துத் தூக்கும்போது தீரும் பாரம்தான்

ஆ:       காத்துவாக்கில் பூத்த வாசம் கன்னி வாசந்தான்

பெ:      நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசந்தான்

ஆ:       மூட மூடவே என்னோட மோகம் ஏறுது

பெ:      பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது

ஆ:       தேடத் தேடக் கோடிக் கோடி சேதி தெரியுது

பெ:      கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

ஆ:       வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

பெ:      கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா பட்டுக் களஞ்சியமே

அ:        தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

ஹே பாடல் ஒன்று – ப்ரியா

HEY PAADAL ONRU - PRIYA

பெ:   ஆஆஆஆஆஆ ஆஆஹா ஹா ஹா….
ஆ:    ஆஹா ஆஹா ஹஹ …..

பெ:   ஹே…….. பாடல் ஒன்று…….. ராகம் ஒன்று……..
சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்

ஹே…….. பாடல் ஒன்று…….. ராகம் ஒன்று……..

() . . . . . . () . . . . . . ()

ஆ:    மின்னல் உந்தன் பெண்மை
என்னைத் தாக்கும் ஆயுதம்
மின்னல் உந்தன் பெண்மை
என்னைத் தாக்கும் ஆயுதம்
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய்
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம்
என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை நீயே

பெ:   ஹே…….. பாடல் ஒன்று…….. ராகம் ஒன்று……..

() . . . . . . () . . . . . . ()

பெ:   தீபம் கொண்டக் கண்கள்
என்னை நோக்கும் காதலில்
தீபம் கொண்டக் கண்கள்
என்னை நோக்கும் காதலில்
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய்
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும் ஜாடையில்
இளம் காதல் ராஜா கன்னா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி நானே

ஆ:    ஹே…….. பாடல் ஒன்று…….. ராகம் ஒன்று……..

() . . . . . . () . . . . . . ()

பெ:      நேரம்  இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்
நேரம்  இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்

ஆ:    ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவையாகும் காவியம் ஹொய் ஹொய்
ஓரம் நெஞ்சின் ஓரம் 
சுவையாகும் காவியம்

பெ:   ஒரு மாலை நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும் மாலை நானே
ஹே…….. பாடல் ஒன்று…….. ராகம் ஒன்று……..

ஆ:    சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
ஹே…….. பாடல் ஒன்று…….. ராகம் ஒன்று……..
 
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...