நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்

NINAITHADHU YAAROA - PAATTUKKU ORU THALAIVAN


ஆ:       நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னைப் பாட நான்தானே
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்
உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்

பெ:      நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னைப் பாட நான்தானே

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

ஆ:       மனதில் ஒன்று விழுந்ததம்மா
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா
கைகளில் வந்தே புரிந்ததம்மா
நான் அறியாத உலகினைப் பார்த்தேன்
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே
படித்தேன் நானும் தினமே தினமே
பரவசம் ஆனேன் அன்பே

பெ:      நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னைப் பாட நான்தானே

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

பெ:      பூவெடுத்தேன் நான் துடுத்தேன்
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்
பூவிழி மூட முடியவுமில்லை
மூடிய போது விடியவுமில்லை
கடலைத் தேடும் காவிரிப் போல்
கலந்திட வேண்டும் உன் மடி மேல்
இதுப் புது சொந்தம் அன்பே

ஆ:       நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்
உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்

பெ:      நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னைப் பாட நான்தானே

  

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...