குருவாயூரப்பா குருவாயூரப்பா – புதுப் புது அர்த்தங்கள்

GURUVAAYOORAPPA – PUDHU PUDHU ARTHANGAL


ஆ:       குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெ:      குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ஆ:       ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

பெ:      குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ * ♪ * ♪ * ♪

ஆ:       தேனாற்றம்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

பெ:      தினந்தோறும் இரவில் நடு ஜாமம் ரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆ:       அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவந்தான்

பெ:      வா வா என் தேவா செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே

ஆ:       குருவாயூரப்போ…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ * ♪ * ♪ * ♪

பெ:      ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க

ஆ:       எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க

பெ:      பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

ஆ:       மாது உன் மீது இப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே
குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெ:      குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ஆ:       ராதை உனக்குச் சொன்ன    வே….தமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

பெ:      குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….                            (ஹஹஹஹான்)
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆ:       நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...