குழலூதும் கண்ணனுக்கு - மெல்ல திறந்தது கதவு

KUZHAL OODHUM KANNANUKKU - MELLA THIRANTHADHU KADHAVU


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்
பாட்டுக் கேட்குதா குக்கூகுக்கூகுக்கூ

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்
பாட்டுக் கேட்குதா  குக்கூகுக்கூகுக்கூ
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா ♪ * ♪..      ♪ * ♪..     ♪ * ♪..
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்
பாட்டுக் கேட்குதா  குக்கூகுக்கூகுக்கூ

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்
பாட்டுக் கேட்குதா  குக்கூகுக்கூகுக்கூ
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா ♪ * ♪..      ♪ * ♪..     ♪ * ♪..

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் ராவானா வேகுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்
பாட்டுக் கேட்குதா  குக்கூகுக்கூகுக்கூ
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா ♪ * ♪..      ♪ * ♪..     ♪ * ♪..
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்
பாட்டுக் கேட்குதா  குக்கூகுக்கூகுக்கூ



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...