SENGURUVI SENGURUVI - THIRUMOORTHI
ஆ: சிறுவாணி தண்ணியைப் போல்
சிலு சில்லுன்னு சிரிப்பிருக்கும்
கடையாணிச் சக்கரம் போல் கண்ணிரண்டும் சுத்தி வரும்
மருதாணி சிவப்பாட்டாம் மணிக்கண்ணம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்து பாடி வரும்
♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஆ: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
கு: செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஆ: ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
கு: முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
ஆ: வெட்கமெல்லாம் மூட்ட கட்டி வச்சா என்ன ஓரமா
பெ: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஆ: வெண்ப்பருத்தி
நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்து வச்ச நளினமான மாலையிது
கு: தன தனனனான தானனனா தன
தனனனான தானனனா
பெ: சென்னி மலை தேனெடுத்து
செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
கு: தன தனனனான தானனனா தன
தனனனான தானனனா
ஆ: ஹா... ராசாத்தி
ஒடம்பிலிருக்கும் ரவிக்கை துணி நானாக (ஹா)
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்சா ஆகாதா
பெ: ஆத்தாடி மறைஞ்சிருக்கும்
அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்கை கட்டி எட்டு திக்கும் போகாதா
ஆ: அடி சீனி சக்கரையே (அஹா) எட்டி நீயும் நிக்கிறியே (ஹா)
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே
கு: செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
கு: நனனனா நனன நனனனா நானான
நனனனா நனன நனனனா
நனனனா நானான நனனனா நானான
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
பெ: கள்ளழகர் வைகையில் கால்
பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்துகிட்டு பருவ ராகம் பாடணுமே
கு: தன தனனனான தானனனா தன
தனனனான தானனனா
ஆ: சொக்கனுக்குப்
பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் புடவையில் ஒளிஞ்சுக்கிட்டு நெனச்ச தாளம்
போடணுமே
கு: தன தனனனான தானனனா தன தனனனான
தானனனா
பெ: ஆனாலும் உனக்கு ரொம்ப
அவசரம்தான் மாமாவே (ஹா)
ஒன்னாகி கூடும்போது ஊர் முழுக்க பாக்காதா
ஆ: ஆஹ்...பாத்தாலும் தவறு
இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேர்க்காதா
பெ: என்ன வாட்ட எண்ணுறியே (ஹஹான்) கைகோர்த்து பின்னுறியே (ஹான்)
உன் பாட்ட பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே
ஆ: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
கு: செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
பெ: ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆர்வமா
கு: முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
ஆ: வெட்கமெல்லாம் மூட்ட
கட்டி வச்சா என்ன ஓரமா
கு: செங்குருவி
செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
No comments:
Post a Comment