SEEVI SENUKEDUTHU - VETRI VIZHA
ஆ: சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்கவந்த மாமென் நான்தானே
பெ: சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்கவந்த மாமென் நீதானே...
ஆ: மாப்பிள்ள கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே…. மல்லிகை பூபாலம்தான்
ஆ: சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பொண்ணே… ஹேய்
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்கவந்த மாமென் நீதானே...
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ: தேரில் ஏறித்தான் மாமா மாமா தேவலோகம்தான் பார்ப்போம்
ஆ: தேடி பார்க்கலாம் வாம்மா வாம்மா தேவ ரகசியம் காப்போம்
பெ: பூட்டி பூட்டிதான் பார்த்தேன் பார்த்தேன் கேட்கவில்லையே மனசு
ஆ: அ.. ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும் சூடு ஏறிடும் வயசு
பெ: சொப்பனமும் தந்ததொரு தொந்தரவுதான்
ஆ: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெ: கூடினா பிரியாது வேறேதும் தெரியாது... ஹோய்
ஆ: சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பொண்ணே….. ஹஹஹான்
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்கவந்த மாமென் நீதானே...
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ தோனலாச்சுது எனக்கு
பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ போட்டு பார்க்கிறேன் கணக்கு
ஆ: அஹான் தூண்டி போட்டுத்தான் பூட்டி இழுக்குது ஏன்டி நமக்குள்ள வழக்கு
பெ: சேர்ந்து படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்து போச்சுது கிழக்கு
ஆ: அத்தனையும் மொத்தத்தில அல்லி எடுப்பேன்
பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
ஆ: ஏறுனா இறங்காது மனசுதான் கிரங்காது... ஹோய்
பெ: சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பொண்ணு
ஆ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்கவந்த மாமென் நான்தானே
சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பொண்ணே
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்கவந்த மாமென் நீதானே...
ஆ: மாப்பிள்ள கையாலே மாலைதான் நீ வாங்கு….
பெ: மன்மதன் போட்டானே மல்லிகை பூபாலம்தான்
ஆ: சீவி சினுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பொண்ணே… ஹான்
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்கவந்த மாமென் நீதானே...
No comments:
Post a Comment