கலைவாணியோ ராணியோ - வில்லுப் பாட்டுக் காரன்

KALAIVANIYO RANIYO - VILLU PATTUKARAN


கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எது தான் பேரோ

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

)( )( )( )(

பாதந்தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டி வந்தது கூட
பாதங்கள பார்த்ததுமே பார்வ வல்லியே மேலே
வேதனைகளை மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச் சோல
பூத்ததய்யா பூவு அது கையழகு
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப் பாட
நல்லதைச் சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீதப்போல
கண்டதும் நின்னேன் சிலையப் போல
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எது தான் பேரோ

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ

)( )( )( )(

கோட மழ கொண்டு வரும் கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும் தாகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊருலகில் அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல சுந்தர தேவி ஜொலிப்பு

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எது தான் பேரோ

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...