கஸ்தூரி மானே - புதுமைப் பெண்

KASTHURI MAANE – PUDHUMAI PENN


ஆ:       கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
ஜாதி பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது

பெ:   ஜாதி பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு

கு:    ஆஆஆ……….ஆஆஆ………. ஆஆஆ……
ஹஹஹா ….ஹஹஹா…. ஹஹஹா….….….

… ♪♪ … … ♪♪ … … ♪♪ … … ♪♪ …

ஆ:       கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு

பெ:   கன்னம் புண்ப்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றி பொட்டொன்று வைத்து கொள்ளு

ஆ:       பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாய் ஊரும்
அருந்த நேரம் சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாய் ஊரும்
அருந்த நேரம் சொல்லு

பெ:   பெண்மையே பேசுமா, பெண்மையே பேசுமா

ஆ:       மௌனம் தான் பள்ளியறை மந்திரமா

பெ:   கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு

ஆ:       ஜாதி பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு

… ♪♪ … … ♪♪ … … ♪♪ … … ♪♪ …

கு:    ஆஆஆஆஆ……….ஆஆஆஆஆ……….ஆஆ……….ஆஆஆ

பெ:   ஆஹா பொன்முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்
என்னை ஏதேதோ செய்கின்றது

ஆ:       வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்
இங்கே தேன் மாரி பெய்கின்றதே

பெ:   என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல்
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல்
நடந்து போகின்றதே

ஆ:       நாணமே போனது, நாணமே போனது

பெ:   போதுமே ஆளை விடு ஆடை கொடு

ஆ:       கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
ஜாதி பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது

பெ:   ஜாதி பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது

ஆ:       கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...