போயா ஓன் மூஞ்சில - பொன்னு விலையுற பூமி


POYAA UN MUNJILA - PONNU VILAIYURA BOOMI


பெ1:  போயா ஓன் மூஞ்சில என் கைய வைக்க

போயா ஓன் மூஞ்சில என் கைய வைக்க
உன் நெஞ்சுக்குள்ள மஞ்சாபத்துல நெய்ய வைக்க

போயா ஓன் மூஞ்சில என் கைய வைக்க
உன் நெஞ்சுக்குள்ள மஞ்சாபத்துல நெய்ய வைக்க
நான் இஸ்பட்டு ராணி
கிட்ட வந்தா கொட்டிடும் தேனீ
இது பிஸ்கட்டு மேனி
எட்ட நின்னு பார்த்துட்டு போ நீ

போயா ஓன் மூஞ்சில என் கைய வைக்க

பெ2:  வாயா என் கண்ணுல நீ மைய வைக்க
(ஆ1:         சபாஷ் சரியான போட்டி..)
வாயா என் கண்ணுல நீ மைய வைக்க
நான் அல்லி வச்ச கொண்டையில பூவ வைக்க
நான் மன்மத கள்ளி
கொஞ்சுகிற சுந்தர வள்ளி
என் கன்னத்தக் கிள்ளி
கொண்டு போயா கையில அள்ளி

வாயா என் கண்ணுல நீ மைய வைக்க

´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´

பெ1:  நீ வந்தது என்ன போட்டியா
அடி வாங்கி கட்டிக்கப் போறியா
வஞ்சி கோட்டை வாலிபனின் பத்மினி நான் பார்த்தியா
´*•.¸♫♪¸.•*´
பெ2:  இங்க மின்னி மினுக்க வந்தியா
இந்த வைஜயந்திய பார்த்தியா
என்ன பத்தி கேட்டு பாரு எடுத்து கூறும் இந்தியா

ஆ1:   மஞ்ச மைனா என் மாமன் உந்தன் நைனா

ஆ2:   வாடி ராக்கு நான் வெத்தலைக்கேத்த பாக்கு

ஆ1:   என் பக்கம் வந்து முத்தம் தந்தா

ஆ2:   வாங்கி தரேன் தேங்க பாலு

ஆ1:   போடா…..ங்ங்ங்
போடா உன் மூஞ்சில என் கைய வைக்க
உன் நெஞ்சுக்குள்ள மஞ்சாபத்துல நெய்ய வைக்க

பெ2:  வாயா என் கண்ணுல நீ மைய வைக்க

´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´

பெ2:  நான் ஒத்தக் கண்ணுல பேசுவேன்
சிறு ஒரே பார்வ வீசுவேன்
மைனருங்க மார்புல தான் வாச சந்தனம் பூசுவேன்
´*•.¸♫♪¸.•*´
பெ1:  அட எத்தன ஊரு மந்திரி
அடி எத்தன ராஜ தந்திரி
எல்லாரையும் பின்னாலதான் இழுக்கும் அழகு சுந்தரி

ஆ2:   வாடி கள்ளி வடிவேலுக்கு ஏத்த வள்ளி

ஆ1:   போற தள்ளி நான் பொலம்புறேனே சொல்லி

ஆ2:   அடி வஞ்சி உன்ன வச்சிக்கிறேன்

ஆ1:   நெஞ்சோட நா தச்சிக்கிறேன்

ஆ2:   போயாங்ங்ங்...

பெ1:  போயா ஓன் மூஞ்சில என் கைய வைக்க
உன் நெஞ்சுக்குள்ள மஞ்சாபத்துல நெய்ய வைக்க

பெ2:  வாயா என் கண்ணுல நீ மைய வைக்க
நான் அல்லி வச்ச கொண்டையில பூவ வைக்க

பெ1:  நான் இஸ்பட்டு ராணி
கிட்ட வந்தா கொட்டிடும் தேனீ

பெ2:  நான் மன்மத கள்ளி
கொஞ்சுகிற சுந்தர வள்ளி

பெ1:  போயா ஓன் மூஞ்சில என் கைய வைக்க
உன் நெஞ்சுக்குள்ள மஞ்சாபத்துல நெய்ய வைக்க

பெ2:  வாயா என் கண்ணுல நீ மைய வைக்க

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...