ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை

OH VASANTHA RAJA - NEENGAL KETTAVAI


பெ:   ……….வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

……….வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா……….

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

ஆ:    வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமேப் பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமேப் பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடியப் பூச்சரம் வானவில் தானோ

பெ:   ……….வசந்த ராஜா

ஆ:    தேன் சுமந்த ரோஜா
என் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

பெ:   ……….வசந்த ராஜா

ஆ:    தேன் சுமந்த ரோஜா, …….

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

பெ:   ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைப்பாயுதே அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா
இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா
இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்

……….வசந்த ராஜா

ஆ:    தேன் சுமந்த ரோஜா

பெ:   என் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்

ஆ:    என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

பெ:   ……….வசந்த ராஜா

ஆ:    தேன் சுமந்த ரோஜா

இரு:  ……………..

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...