இளங்காத்து வீசுதே - பிதாமகன்

ELANGAATHU VEESUDHEY - PITHAMAGAN


எளங்காத்து வீசுதே எச போல பேசுதே
எளங்காத்து வீசுதே எச போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

கரும்பாற மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
எளங்காத்து வீசுதே எச போல பேசுதே

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு

அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

எளங்காத்து வீசுதே எச போல பேசுதே

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

மனசுல என்ன ஆகாயம்
தெனம்தெனம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா

வெத வெதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரு எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு

ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலநதி போல

கரும்பாற மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே

புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே

… ♪♪… … ♪♪…



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...