ஆசையிலே பாத்தி கட்டி - எங்க ஊரு காவல்காரன்

AASAYILE PAATHI KATTI - ENGA OORU KAVALAKARAN


ஆ:       ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வைக்க
வா…………... பூவாயி
… ♪… … ♪…
              ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வைக்க
வா………. பூவாயி
ஆதரவு தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டி வச்சேன்
வா………. என் தாய்
நானா பாடலையே நீ தான் பாட வச்ச
நானா பாடலையே நீ தான் பாட வச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வைக்க
வா………. பூவாயி

… ♪… … ♪… … ♪… … ♪… … ♪…

ஆ:       கண்ணு தான் தூங்கவில்ல
காரணம் தோன வில்ல
பொண்ணு நீ ஜாதி முல்ல
பூ மாலை ஆக வில்ல
கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து
வந்து தான் கூடவில்ல

கூற பட்டு சேல நான் வாங்கி வரும் வேல
போடு ஒரு மால நீ சொல்லு அந்த நாள
உனக்காக நான் காத்திருக்க பதில் கூறு பூவாயி

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வைக்க
வா………. பூவாயி
ஆதரவு தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டி வச்சேன்
வா………. என் தாய்

… ♪… … ♪… … ♪… … ♪… … ♪…

பெ:      சொந்தமா பாடும் கிளி
சோகமா போனதையா
உள்ளம் தான் நொந்து நொந்து
ஊமையா ஆனதையா
கண்ணுல நீரு காரணம் யாரு
கன்னி நான் கூறவா

ஒத்த மரம் போல நான் நிக்கும் இந்த வேள
என்ன சொல்லி பாட என் துன்பம் எல்ல மீற

ஆ:   தொடராது இது இனிமேல் தொண நான் தான் பூவாயி

பெ:      ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வைக்க
வா………. பூவாயி
ஆதரவு தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டி வச்சேன்
வா………. என் தாய்
நானா பாடலையே நீ தான் பாட வச்ச
நானா பாடலையே நீ தான் பாட வச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வைக்க
வா………. பூவாயி


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...