DEVANIN KOVIL - ARUVADAI NAAL
ஆ: ப்ரேமம் பிரேமாதி பிரேமப் பிரியம் பிரேம வசியப் பிரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
பிரியம் ப்ரியமாதி ப்ரீத்தித்த ப்ரேமம் ப்ரீதி வசிய ப்ரீத்தம்
ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் குமம் கும்கும் கும்குமம் தந்தோம்
தந்துனா மமஜீவனம் மம ஜீவனம் மம ஜீவனம்
மதம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மம ஜீவிதம் மம ஜீவிதம் மம ஜீவிதம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி சாந்தி … !!
பெ: தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪
பெ: நான் ஒரு சோக சுமை தாங்கி
துன்பம் தாங்கும் இடி தாங்கி
நான் ஒரு சோக சுமை தாங்கி
துன்பம் தாங்கும் இடி தாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால் தானே நிம்மதி
தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪
ஆ: ஹேய்ய்ய் ….ஹே ஹே தந்தன தந்தன தந்தனா ஆஅ…
தந்தானா தந்தானா தான நானா நா நா …
தந்தானா தந்தானா ஹெய்ய்ய் ….
பெ: ஒரு வழி பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
ஒரு வழி பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
நான் ஓர் கண்ணீர் காதலி
தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
No comments:
Post a Comment