தோடி ராகம் - மாநகரக் காவல்

THODI RAAGAM - MAANAGARA KAAVAL


பெ.கு:   ஆ… ♪…… ♪…………

ஆ:      தோடி ராகம் பாடவா                        பெ:    மெல்ல பாடு
ஆ:      ஆதி தாளம் போடவா                       பெ:    மெல்ல போடு
ஆ:      மேனி என்னும் வீணை மீட்டுகின்ற வேளை
மடியினில் உனை சேர்த்து

ஆ:      தோடி ராகம் பாடவா                        பெ:    மெல்ல பாடு
ஆ:      ஆதி தாளம் போடவா                       பெ:    மெல்ல போடு

பெ:      லலலலலலாலா லலலலாலாலா லலாலாலாலா

( … ♪… * … ♪… * … ♪… * … ♪… * … ♪… )

ஆ:      இதுவரை உனை நானும்            (பெ:   ஆ… ♪…)
இளையவன் எனை நீயும்  (பெ:   ஆ… ♪…)
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்

பெ:     முதல் முதல் முகம் பார்த்து                (பெ.கு: ஆ… ♪…… ♪…ஆ)
முழுவதும் உடல் வேர்த்து         (பெ.கு: ஆ… ♪…… ♪…ஆ)
(நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம் பெ.கு:   ஆ… ♪…… ♪…)

ஆ:      கல்யாணம்
கச்சேரி
கண்ணார இந்நாளில் காணலாம்

பெ:     பொன் ஊஞ்சல்
பூ பந்தல்
வைபோகம் தை மாதம் மாலையிடு

ஆ:      தோடி ராகம் பாடவா                        பெ:    மெல்ல பாடு
ஆ:      ஆதி தாளம் போடவா                       பெ:    மெல்ல போடு

( … ♪… * … ♪… * … ♪… * … ♪… * … ♪… )

பெ.கு:   லல்லல்லாலா லல்லாலா லல்லல்லாலா லல்லாலா
லல்லல்லாலா லல்லாலா லல்லல்லாலா லல்லாலா

பெ:     இரவுகள் என்னை வாட்டும்
இடையினை அது கூட்டும்
நீ இன்றி நான் இங்கு பாய் போடும் மாது

ஆ:      பிரிவுகள் இனி ஏது          (பெ.கு: ஆ… ♪…… ♪…ஆ)
பிறவியில் கிடையாது             (பெ.கு: ஆ… ♪…… ♪…ஆ)
(நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது பெ.கு: ஆ… ♪…… ♪…ஆ)

பெ:     அன்றாடம்
பூங்காற்று
உன் பேரை என் காதில் ஓதுது

ஆ:      எப்போது
நான் வேண்டும்
அப்போது பூங்காற்றை தூது விடு

பெ:     தோடி ராகம் பாடவா                        ஆ:     மெல்ல பாடு
பெ:     ஆதி தாளம் போடவா                       ஆ:     மெல்ல போடு
பெ:     (மேனி என்னும் வீணை மீட்டுகின்ற வேளை
மடியினில் எனை சேர்த்து பெ.கு: ஆ… ♪…… ♪…… ♪…)


ஆ:      தோடி ராகம் பாடவா                        பெ:    மெல்ல பாடு
ஆ:      ஆதி தாளம் போடவா                       பெ:    மெல்ல போடு


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...