எம்புட்டு இருக்குது ஆச - சரவணன் இருக்க பயமேன்

YEMBUTTU IRUKKUDHU - SARAVANAN IRUKKA BAYMEN


ஆ:     எம்புட்டு இருக்குது ஆச ஓன்மேல
அதக்காட்டப்போறேன்
    
பெ:    அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
    
ஆ:     உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே    
    
பெ:    செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே
    
ஆ:     கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி
() … ♪… ()
எம்புட்டு இருக்குது ஆச ஓன்மேல
அதக்காட்டப்போறேன்
    
பெ:    அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்………..

() … ♪… () … ♪… () … ♪… ()

ஆ:     கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
    
பெ:    பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
    
ஆ:     தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
    
பெ:    சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாத்திடலாம்
    
ஆ:     முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட    
வெஷம் போல ஏறுதே சந்தோசம்
எம்புட்டு இருக்குது ஆச ஓன்மேல
அதக்காட்டப்போறேன்
    
பெ:    அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    
() … ♪… () … ♪… () … ♪… ()

ஆ:     ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்துவெளக்கென மாறிப்போச்சி
    
பெ:    கண்ண கதுப்பு என்ன பறிக்க
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு
    
ஆ:     பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
    
பெ:    மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு
என்ன இருட்டிலும் நீ அறிந்த
    
ஆ:     சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மல ஏற ஏங்குறேன்
ஓன் கூட எம்புட்டு இருக்குது ஆச
ஓன் மேல அதக்காட்டுப்போறேன்

பெ:    அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...