MAANUTHU MANDHAYILE – KIZHAKKU SEEMAYILE
ஆ: மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே....
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....

பெ.கு: தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி,
அவன்….தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி……
ஆ: சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே
கு: சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே

♥´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´♥
ஆ: நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
பெ.கு: மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
ஆ: பச்ச ஒடம்புக்காரி……. பாத்து நடக்கச்சொல்லுங்க
பெ.கு: பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு
ஆ: மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு
♥´*•.¸♫♪¸.•*´♥
மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே....
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....
பெ.கு: தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி,
அவன்….தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி……
ஆ: சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே
கு: சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே
♥´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´♥
ஆ: ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சிப் போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு

கு: காராம்பசு ஓட்டி வாராண்டித் தாய் மாமன்
ஆ: வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

பெ.கு: பச்ச ஒடம்புக்காரிப் பாத்து நடக்கச்சொல்லுங்க
ஆ: ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இறுக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இறுக்கச்சொல்லு
♥´*•.¸♫♪¸.•*´♥
மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே....
(அய்யோ)
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....
பெ.கு: தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி,
அவன்….தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி……
ஆ: சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே
(ஹோய்)
கு: சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே
ஆ: மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே…..
(போடு)
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…..
No comments:
Post a Comment