ஜோடி நல்ல ஜோடி - சின்னப் பசங்க நாங்க

JODI NALLA JODI - CHINNA PASANGA NAANGA


ஆ:     ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு
ஆ.கு:  ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு

ஆ:     பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு
ஆ.கு:  பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெ:     நல்ல தவமிருந்து பெத்து எடுத்த ராணி மகா ராணி
பெ.கு:  நல்ல தவமிருந்து பெத்து எடுத்த ராணி மகா ராணி

பெ:     இந்த குணவதியக் கண்டுப்பிடுச்ச ராசா மகா ராசா
பெ.கு:  இந்த குணவதியக் கண்டுப்பிடுச்ச ராசா மகா ராசா

ஆ:     ஓஹொஹோஹோ
ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு

பெ:    பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:     ஒன்னா ரெண்டா உள்ளதயெல்லாம்
கண்ணால் சொல்லு சேதிதான்

பெ:    பொன்னால் கட்டி பூட்டியிழுத்து
பூஜையப் போடும் நேரம்தான்

ஆ:     மெத்தயில சிந்தாம இனி கோப்பாளம்மா முத்தாரம்

… ♪… ♪♪ … ♪…

பெ:    அத்தனையும் சொல்லாம அத அடக்கி வப்பா நித்தாரம்

… ♪… ♪♪ … ♪…

ஆ:     ஆயிரத்தில் ஒன்னேஒன்னு
கு:     அம்சமுள்ளப் பொஞ்சாதி

பெ:    தேடி இப்போ வந்தாச்சி
கு:     சின்னச் சிட்டு சிங்காரி

ஆ:     அள்ளாமலேக் கில்லாமலே மல்லாடுறேக் கைகாரி

பெ:    ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

ஆ:     நல்ல தவமிருந்து பெத்து எடுத்த ராணி மகா ராணி
இந்த குணவதியக் கண்டுப்பிடுச்ச ராசா மகா ராசா

கு:     ஓஹொஹோஹோ
ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:    அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்
அடக்கி வச்சா பாவம்தான்

ஆ:     அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்
அடிச்சதம்மா யோகம்தான்

பெ:    ஒத்தயிலே நின்னாரு இப்போ ரெட்டையாக வந்தாரு

… ♪… ♪♪ … ♪…

ஆ:     சக்தியுள்ள அண்ணாரு அவர் காதலப் போல வேறாரு

… ♪… ♪♪ … ♪…

பெ:    ஏழுப்பட்டி சீமயிலும்
கு:     ஏழ சனம் பாராட்டும்

ஆ:    வாழயென உங்க வமுசம்
கு:     வாழ்க்கயில் இனி சீராட்டும்

பெ:    அன்பானது பண்பானது ஒன்னானது கொண்டாட்டம்

ஆ:     ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெ:     நல்ல தவமிருந்து பெத்து எடுத்த ராணி மகா ராணி
இந்த குணவதியக் கண்டுப்பிடுச்ச ராசா மகா ராசா

கு:     ஓஹொஹோஹோ
ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு
ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...