அடி ஆத்தாடி – கடலோரக் கவிதைகள்

ADI AATHAADI - KADALORA KAVITHAIGAL


பெ:   அடி ஆத்தாடி……………………..
… ♪… ♪♪♪♪ … ♪…
அடி ஆத்தாடி……
இளமனசொன்னு ரெக்கக் கட்டிப்பறக்குது சரிதானா...
அடி அம்மாடி..
ஒரு அல வந்து மனசில அடிக்குது அதுதானா...

ஆ:    உயிரோடு...                      பெ:   உறவாடும் 
ஆ:    ஒருக்கோடி...ஆனந்தம்...

பெ:   இவன் மேகம் ஆக... யாரோக் (காரணம்...
அஹஹான் அஹஹான் ஆஹாஹாஆஆஆஆஆஆஆ)

ஆ:    அடி ஆத்தாடி...
இளமனசொன்னு ரெக்கக் கட்டிப்பறக்குது சரிதானா...
அடி அம்மாடி..

… ♪… ♪♪ … ♪… ♪♪♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:   மேலேப் போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ...
உன்னப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ...

ஆ:    இப்படி நான் ஆனதில்ல
புத்திமாறிப் போனதில்ல...
முன்னேப் பின்னே நேர்ந்ததில்ல
மூக்கு நுனி வேர்த்ததில்ல...

பெ:   கன்னிப்பொண்ணுக் கண்ணுக்குள்ள
கத்திச்சண்டக் கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சிப் பார்த்தாயோ
எசக் கேட்டாயோ………………o…o…….
♪… ♪♪♪♪ … ♪
லலலலலா………லல லல லல லல லா…….
லலலலலா…… லலலலலா…… லலலலலா……
லல லல லல லல லல லல லா…….

… ♪… ♪♪ … ♪… ♪♪♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:    தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்...
உண்ம சொல்லுப் பொண்ணே என்னை,
என்ன செய்ய உத்தேசம்...

பெ:   வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்துப் போவதென்ன...
கட்டுமரம் பூப்பூக்க
ஆசப்பட்டு ஆவதென்ன...

ஆ:    கட்டுத்தறிக் காள நானே
கன்னுக்குட்டி ஆனேனே...
தொட்டுத் தொட்டுத் தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே...
சொல் பொன்மானே……………………….

பெ:   அடி ஆத்தாடி...
இளமனசொன்னு ரெக்கக் கட்டிப்பறக்குது சரிதானா...
அடி அம்மாடி..
ஒரு அல வந்து மனசில அடிக்குது அது தானா...

ஆ:    உயிரோடு...                      பெ:   உறவாடும் 
ஆ:    ஒருக்கோடி...ஆனந்தம்...

பெ:   இவன் மேகம் ஆக... யாரோக் (காரணம்...
அஹஹான் அஹஹான் ஆஹாஹாஆஆஆஆஆஆஆ)

ஆ:    அடி ஆத்தாடி...
இளமனசொன்னு ரெக்கக் கட்டிப்பறக்குது சரிதானா...
அடி ஆத்தாடி... 



1 comment:

  1. Very useful & detailed information on Traditional Paathi Vilakku. You can buy more Authentic and Handmade Paathi Vilakku Lamps from our artisans Online in Kerala @ Kerala Paathi Vilakku.

    ReplyDelete

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...