அடி மானா மதுரையில - கோயில் காளை


ADI MAANAA MADHURAIYILE - KOYIL KAALAI


ஆ:    அடி மானா மதுரையில
மல்லியப்பூ வித்தப்புள்ள
வீணா வளந்தப் புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள

வேணாம் எங்கிட்டக் குறும்பு
விட்டு வெலகி
தானா அங்குட்டு ஒதுங்கு

அடி மானா மதுரையில
மல்லியப்பூ வித்தப்புள்ள
வீணா வளந்தப் புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள

வேணாம் எங்கிட்டக் குறும்பு
விட்டு வெலகி
தானா அங்குட்டு ஒதுங்கு

ரத்தின மணியே சுத்துரக் கிளியே
குப்பையில் மொளச்ச வெத்தலக் கொடியே
அச்சாரம் வைக்காம முத்தாரம் இங்கேருக்கு மானா

பெ:   அடடடடட வாவா வயசு புள்ள
வட்டமிடும் சின்னப்புள்ள
பூவா மனக்கும் புள்ள
பொட்டு வச்சப் பொட்டப்புள்ள
தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா
வந்து இனிக்குது

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:   தா...ளாது தள்ளி நடந்திடக் கூ...டாது
சிங்கிடி சிக்கு (ஹே ஹேய்) ஜினுக்கு சிக்கு

ஆ:    கூடாது குத்தம் கொற சொல்லக் கூடாது
சிங்கிடி சிங்கி (ஆஹா) ஜினுக்கு சிங்கி

பெ:   நானா தனியாளு இது போல தனி ஏது

ஆ:    எனக்கு அது வேணாம் முடியாது
தள்ளிப் போமா படியாது

பெ:   வெத்தல மடிச்சி மெத்தையில் கொடுத்து
ஒன்னோட ஒன்னாகும் ஓன் வீட்டத் தேடி வர வாவா

ஆ:    அடி மானா மதுரையில
மல்லியப்பூ வித்தப்புள்ள
வீணா வளந்தப் புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள

பெ:   தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா
வந்து இனிக்குது

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:    கூ...டாது வெக்கம் மறந்திடலா...காது
சிங்கிடி சிங்கி (ஆஹா) ஜினுக்கு சிங்கி

பெ:   தாங்காது தங்கு தடைகள் சொல்ல ஆகாது
ஜிக்கிடி ஜிக்கு (ஆஹா) சினுக்கு ஜிக்கு

ஆ:    வேணாம் விளையாட்டு
அடி நீயா வழி  மாத்து

பெ:   முழிச்சிருந்து மூனாம் கரப் பார்த்து
கொஞ்சம் வாயா எடம் பார்த்து

ஆ:    உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும் மானா

பெ:   அட வாவா வயசு புள்ள
வட்டமிடும் சின்னப்புள்ள
பூவா மனக்கும் புள்ள
பொட்டு வச்சப் பொட்டப்புள்ள
தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா
வந்து இனிக்குது

ரத்தினக் கிளியே சுத்துது வெளியே
முத்திரப் போட வந்தது தனியே
இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளியெடு வாவா

ஆ:    ஜினுக்கு ஜினுக்கு ஜின
மானா மதுரையில
மல்லியப்பூ வித்தப்புள்ள
வீணா வளந்தப் புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள

வேணாம் எங்கிட்டக் குறும்பு
விட்டு வெலகி
தானா அங்குட்டு ஒதுங்கு…………



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...